அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயர் ரக கட்டண மருந்துகள், வெளியே கிடைப்பதை விட 50 சதவிகிதத்தில் இருந்து 90 சதவிகிதம் வரை மலிவு விலையில் கிடைக்கும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதன்படி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் விரைவில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.