சென்னை கலைவாணர் அரங்கத்தில் 73 இணையர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சீர்வரிசை கொடுத்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “தாலி எடுத்து கொடுக்கும்போது தம்பதிகளின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. சந்தேகத்தில் காதல் திருமணமா என கேட்டபோது பாதிபேருக்கு காதல் திருமணம்தான் என தெரிந்தது. என் திருமணமும் காதல் திருமணம்தான். காதல் திருமணம் செய்வது ரொம்பவே கஷ்டமானது. காதலை சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்” என்றார்.
நன்றி: PT