இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டப்-ஸ்டெப் பிரான்டின் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டப்-ஸ்டெப் பஸ் X12 லவ் எடிஷன் (Dubstep Buzz X12) என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ஸ்விகியின் இன்ஸ்டாமார்ட்-இல் பிரத்யேகமாக கிடைக்கிறது. காதலர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த இயர்பட்ஸ் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 599 விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.