திருமணமான நபருடன் காதல்.. பெண் காவலர் தற்கொலையில் பகீர் தகவல்

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. விவாகரத்தான அபிநயா ஏற்கனவே திருமணமான வினோத் என்ற காவலரை காதலித்த நிலையில் அவரை மணக்க நினைத்தார். வினோத் கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைவுக்குப் பிறகு அபிநயா மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

தொடர்புடைய செய்தி