மதுரை செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்காமல் விரைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியதும், தொடர்புடையவர்களை இடைநீக்கம் செய்ததும் வரவேற்கத்தக்கது என்றாலும், காவல் மரணங்கள் அரசின் மீதான நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.