சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சௌர்ஹாபவாட் அருகே இன்று (டிச.16) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.