“அடுத்த வேலையை பாரு” - இயக்குநருக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸான படம் ‘குட் பேட் அக்லி’. படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “படம் வெளியானதும் நான் அஜித் சார் கிட்ட பேசினேன். ஓகே, படம் ஹிட் ஆயிடுச்சு. படம் ப்ளாக்பஸ்டர் ஆயிடுச்சு. அவ்வளவு தான் அதை மறந்துவிடு. வெற்றியை உன் தலையில் ஏற்றிக் கொள்ளாதே, தோல்வியை உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லாதே. எல்லாத்தையும் விட்டுட்டு அடுத்த வேலையை பாரு என அட்வைஸ் கொடுத்தார்” என்றார்.

தொடர்புடைய செய்தி