அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மார்ச் 9ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று, மறைந்த எம்.பி. பகவான் தாஸ் ரத்தோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை முதலில் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கும்.