சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தில் பல மர்மங்கள் நீடித்து வருகின்றன. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வின்போது தெரியவந்துள்ளது. தலை, கை, கால்கள் என பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அஜித்குமார் உடலின் உட்புற பாகங்களிலும் காயங்கள், ரத்தக்கசிவு இருந்துள்ளது. சங்குப்பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.