சேலம் மற்றும் தூத்துக்குடியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கும் இன்று (ஆக.5) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இரு மாவட்டங்களிலும் வரும் ஆக.8-ம் தேதி பணிநாளாக செயல்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி