திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 9-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.