காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாங்கனித் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக காரைக்கால் பகுதிக்கு ஜூலை.10 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடு செய்யும் வேலை நாளாக ஜூலை.19 அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.