காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று (மே 27) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள இந்த முக்கிய திருவிழாவையொட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேரோட்ட விழாவால் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய விடுமுறைக்கு ஈடாக ஜூன் 6ம் தேதி பணிநாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி