கன்னியாகுமரிக்கு மார்ச் 4, 10ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ஆம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடுசெய்ய மார்ச் 7 மற்றும் 14ஆம் தேதி சனிக்கிழமைகள் வேலை நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மார்ச் 4ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி