அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விழாவை முன்னிட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி