செப்டம்பர் 1 முதல் நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் வி.பி.சிங் கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்கு கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படும். 6.6 லட்சம் கிராமங்களில் உள்ள 30 கோடி கால்நடை வளர்ப்பாளர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடை வளர்ப்பை மேம்படுத்த இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.