பீட்சா சாப்பிட்ட சிறுமி - மருத்துவமனையில் அட்மிட்

சென்னை எல்லையம்மன் கோயில் அருகே உள்ள டா டோமினோஸ்-ல் ஒரு குடும்பம் நேற்று (மே 17) சிக்கன் பீட்சா உள்பட மூன்று பீட்சாக்கள் ஆர்டர் செய்துள்ளனர். அதன் பேரில் வீட்டிற்கு டெலிவரியான அந்த பீட்சாக்கள் கெட்டுப்போய் இருந்துள்ளன. இதனை கண்டறிவதற்குள் வீட்டில் இருந்த 6 வயது சிறுமி ஆசையாக சாப்பிட்டுவிட்டாள். உடனே சிறுமிக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதனைப் பார்த்து பதறிப்போன சிறுமியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி