முந்தைய திமுக அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி, இன்றைய தமிழக அரசின் பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, `அன்பு சோலை' - `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்', `உலகம் உங்கள் கையில்' - `வெற்றி மடிக்கணினி திட்டம்' என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், `கலைஞர் கனவு இல்லம்' - `வெற்றி வீடு திட்டம்', `முதல்வர் படிப்பகங்கள்' - `டிஜிட்டல் நூலகம்', `நன்னிலம்' - `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.