பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தம் நடத்த திட்டமிட்டிருந்த டாஸ்மாக் ஊழியர்கள், தமிழக பட்ஜெட் தாக்கல் காரணமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். இந்நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பின்படி, வேலைநிறுத்தம் நாளை (பிப்.18) முதல் தொடங்கும். இதனால் மதுக்கடைகள் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.