காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதற்கு, ஆட்சியரிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருந்தார். இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தும், மது பிரியர்கள், ‘அந்த டாஸ்மாக் கடையை மூடக்கூடாது, அதை விட்டால் வேறு வழி இல்லை’ என ஆட்சியரிடம் எதிர்மனு அளித்துள்ளனர். வேறு கடைக்குச் சென்றால், கனரக வாகனங்களால் எங்களது உயிருக்கு ஆபத்து வரலாம் எனவும் மது பிரியர்கள் கூறுகின்றனர்.
நன்றி: polimernews