மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்ததால் மதுப்பிரியர்கள் வாக்குவாதம்

மதுபானங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு எச்சரித்த பின்பும், ஆம்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.5 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் கடை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி