வாக்காளர் அட்டைகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர், ஆதார் தலைமை நிர்வாக அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிறருடன் மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்நிலையில், விரைவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.