தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்.9) 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விடுதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.