இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசா? ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு

இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்டினருக்கு வாழ்நாள் கோல்டன் விசா வழங்கப்படுவதாக பரவும் தகவலை ஐக்கிய அரபு அமீரகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுபோன்ற தகவல்கள் நாட்டுக்கு வெளியே தனியார் ஏஜென்சிகள் போலியாக வெளியிட்டுள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கும் வாழ்நாள் கோல்டன் விசா என ஒன்று வழங்கப்படுவது இல்லை. எனவே இந்த தகவல்கள் அமீரக அரசுத்துறைகளின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி