ஒவ்வொரு நொடியும் நமது வாழ்க்கையில் நிச்சயம் இல்லாதது என விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 13) மூன்றாவது கட்டமாக நடைபெறுகிறது. அப்போது பேசிய விஜய், "குஜராத் விமான விபத்து ஒரு சோகமான நிகழ்வு. அது தொடர்பான படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை" என்று கூறினார். குஜராத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: PT