தள்ளுவண்டி உணவகங்களுக்கு உரிமம் கட்டாயம்.. மீறினால் நடவடிக்கை

தமிழகத்தில் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள் இணையதளம் மூலமாகவோ, இ-சேவை மையம் மூலமாகவோ இலவசமாக இந்த உரிமத்தை பெற முடியும். உரிமம் இல்லாத கடைகள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே உடனடியாக தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் தங்கள் கடைக்கான உரிமத்தை பெற வலியுறுத்தப்படுகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி