"துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்".. சசிகலா அழைப்பு

சென்னை: எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றுபடுவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். வரும் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்காக “ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்” என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, இந்த கூட்டத்தில், சசிகலா புதிய கட்சியை தொடங்குவது குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், சசிகலா ஆதரவாளர்கள் சிலர் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி