ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண், கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல மூடத்தனம் என்று திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் குன்னத்தில் திமுக, விசிகவினர் இன்று (மே 26) மோதலில் ஈடுபட்ட நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராசா, ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசா பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.