சூரசம்ஹாரம் செய்வோம் - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

இந்து மத வாழ்வியல் முறையில் தலையிட்டால் சூரசம்ஹாரம் செய்வோம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றத்துக்கே பிரச்சனை ஏற்படுத்தினீர்கள் என்றால் ஒவ்வொரு வீடாக சென்று சூரசம்ஹாரம் செய்வோம். அதன்பின் மீண்டும் அமைதியாக திருத்தணிக்கு சென்று விடுவோம். இதுதான் முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் கூறப்படும் செய்தி என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி