தமிழகத்தில் எலுமிச்சை விலை தொடர்ந்து உயர்வு

தமிழகத்தில் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு எலுமிச்சைப் பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையான எலுமிச்சை, தற்போது ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. கடும் வெயில் மற்றும் வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் இந்த வாரத்தில் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕