லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நாளை (ஆக.02) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.