சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் கோலோச்சிய புகழ்பெற்ற நடிகை டயான் லாட் (Diane Ladd), தனது 89-வது வயதில் காலமானார். தனது நீண்ட சினிமா வாழ்க்கையில், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, 'ஆலிஸ் டஸ்ன்ட் லிவ் ஹியர் எனிமோர்', 'வைல்ட் அட் ஹார்ட்' மற்றும் 'ராம்ப்ளிங் ரோஸ்' ஆகிய திரைப்படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டயான் லாட்டின் மறைவு ஹாலிவுட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.