கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையறிந்த மனைவி, கணவரின் கள்ளக்காதலியை நேரில் அழைத்து, “எங்களுக்கு குழந்தைகள் உள்ளன. எனது கணவரை விட்டுவிடு” என கெஞ்சியுள்ளார். சில நாட்களுக்கு பிறகு கணவரையும் - அப்பெண்ணையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில், இதுகுறித்து மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.