ரூ.7,499க்கு அசத்தல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த லாவா

லாவா நிறுவனம், இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. லாவா Bold சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் லாவா Bold N2 என அழைக்கப்படுகிறது. முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் கிளாஸி பேக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

தொடர்புடைய செய்தி