ரூ.11,999க்கு 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த LAVA

Lava நிறுவனம் இன்று (மே 26), தனது புதிய பட்ஜெட் விலை 5G ஸ்மார்ட்போனான 'Lava SHARK 2 5G'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 13-மெகாபிக்சல் AI பின்புறக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5-மெகாபிக்சல் முன்புறக் கேமரா வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் நீடித்து உழைக்கக்கூடிய பிரம்மாண்டமான 6000mAh பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி