+2 மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், +2 மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பண்ணிடுவோம் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார். மேலும் அவர், "மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் அதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான். நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய அம்சங்கள் பாடத்திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி