மைதானத்திற்குள் களமிறக்கப்பட்ட லாங்கூர் குரங்குகள்

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடக்கிறது. அப்போது மைதானத்தில் சுற்றித் திரியும் குரங்குகள், போட்டியைக் காண வரும் ரசிகர்களையும், நேரலை செய்யும் கேமரா மேன்களையும் தொந்தரவு செய்து வருகின்றன. இந்த குரங்குகளை அச்சுறுத்த லாங்கூர் வகை குரங்குகளை உ.பி., கிரிக்கெட் சங்கம் மைதானத்திற்குள் இறக்கியுள்ளது. லாங்கூர் குரங்குகளை கண்டாலே, சாதாரண குரங்குகள் பயந்து ஓடிவிடும் என்பதால் இந்த குரங்குகள் களமிறக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி