கேரளம் மாநிலம் வயநாட்டில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அண்டை மாவட்டமான இடுக்கியில் உள்ள மூணாறிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையான பழைய மூணாறு செல்லும் வழியில் சிஎஸ்ஐ தேவாலயம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டுள்ளது. தொடர் கனமழை நீடிப்பதால் பல்வேறு இடங்களிலும் சிறிய, பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.