குமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள பாறைசாலையில் நிலச்சரிவு காரணமாகப் பிலாஸ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் இடையே இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ்18