பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் போராடி தோல்வியடைந்தார். இன்று (ஆகஸ்ட் 04 ) டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனுடன் நடந்த அரையிறுதியில் போட்டியில் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென் தோல்வியடைந்தார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.