காவடிகளுடன் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகம், கேரளாவில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதயாத்திரையாக வருகை தந்து சண்முக நதி, இடும்பன் குளம், சரவணப் பொய்கை போன்ற புனித நதிகளில் நீராடி விட்டு அலகு குத்தியும், கிரிவல பாதையில் பல்வேறு விதமான காவடிகள் எடுத்து ஆடியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக 3,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி