கடந்த 2005-ம் ஆண்டு 'ஜயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, தற்போது "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்துடன் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ள இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். பெரும்பாலான டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவர் இன்று (நவ.18) தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.