சென்னையில் கட்டப்பட்டுள்ள ‘L' வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்., 15) திறந்து வைக்கிறார். மத்திய கைலாஷ் சந்திப்பில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ்காந்தி சாலை வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.60 கோடி செலவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.