சுழற்சியை மாற்றி 8 ஆண்டுகளிலேயே பூத்த நீலக்குறிஞ்சி மலர்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய குறிஞ்சி மலர்கள், வழக்கமான சுழற்சியை மாற்றி 2018-க்குப் பின் 8 ஆண்டுகளிலேயே நீலகிரி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இதைக் காணச் சுற்றுலாப் பயணிகள் குவியும் நிலையில், பூக்களைப் பறிக்கவோ, மிதிக்கவோ அல்லது நெகிழிப் பொருட்களை வீசவோ கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. தடையை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕