கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (35) என்பவர் திருட்டு உள்பட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இன்று (நவம்பர் 6) சிறை வளாகத்தில் சரவணக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பந்தயச் சாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.