தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் இன்று (மார்ச் 2) மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அடுத்த மகாமகம் 2028ல் நடைபெற உள்ளது. இதை தவிர்த்து, கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நன்றி: Dinakaran