2004ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமிக்கு 2014ல் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.51 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கும்பகோணம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளாக பொறுப்பில் இருந்தவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆசிரியர்கள் உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு விபத்துக்கு பின் தலா ரூ.1 லட்சம் மாநில அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.