தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 16ம் தேதி பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் குழந்தைகள் பலியானது மிகப்பெரிய துயரத்தை தேசிய அளவில் ஏற்படுத்தி இருந்தது. இன்று (ஜூலை 16) கும்பகோணம் தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் தங்களது குழந்தைக்கு பிடித்த உணவுகளை படைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நன்றி: Sun News