முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான KTM இன் புதிய பைக்கான KTM RC 160 விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.1.85 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KTM RC 200 இன் அதே வடிவமைப்பில் RC 160 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களை கவரும் வண்ணம் பல்வேறு முக்கிய அம்சங்களுடன் இந்த பைக் வரவுள்ளது.