கிருஷ்ணகிரி: மனைவி குழந்தைகள் மாயம்- கணவன் போலீசில் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி குருவரெட்டிபோடூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (36) லாரி டிரைவர். இவருடைய மனைவி அமராவதி (32) இவர்களுக்கு மகன் மகள் உள்ளனர். முனிராஜிற்கு அதிகளவு கடன் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் அன்று கணவன் மனைவிக்கும் குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அமராவதி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் முனிராஜ் அவர்களை பல இடங்களில் 3 பேரையும் தேடியும் இல்லாததால் இதுகுறித்து அவர் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி